Skip to content

மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது, அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தக்காளியை மேலும் 300 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் காய்கறி விற்பனையை அதிகரிக்கவும், நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படவுள்ளது. கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் குறைந்த விலையில் துவரம்பருப்பு மற்றும் உளுந்து விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!