சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது “கோட்டை பெரிய மாரியம்மன்” என்று அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள். இந்த அம்மன் கோயிலை கோட்டை
வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது. இவ்விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். உடன் மேயர் இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது. தப்பாட்டம், பம்பை,நாதஸ்வரம் மேளதாளங்களுடன் கோலகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலின் ராஜகோபுரத்திற்கு ட்ரோன் மூலம் மலர் தூவப்பட்ட நிலையில் பக்தர்கள் முழக்கங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.