கடந்த பிப்ரவரி 27ம் தேதி துபாயில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் விமானி ஒருவர் தனது பெண் தோழியை சந்தோஷப்படுத்த விமான பைலட்டின் காக்பிட்டில் அமரவைத்துள்ளார். இது குறித்து விமானத்தின் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விமானப்போக்குவரத்து இயக்குனரகம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணை நடத்தியது. இதில் சம்பந்தப்பட்ட பெண் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர் என்பதும், சம்பவத்தன்று அவர் அதே விமானத்தில் பயணியாக சென்றதும் தெரியவந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
காக்பிட்டில் விமானியின் தோழி.. ஏர் இந்தியாவுக்கு ரூ.3 லட்சம் அபராதம்…
- by Authour