ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவு காலை10.20 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 8,429 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 2,873 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 522 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்று முடிவின்படி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 5,656 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மொத்தம் உள்ள 77 வேட்பாளர்களில் 30 வேட்பாளர்கள் முதல் சுற்றில் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. அவர்கள் 0 வாக்குகள் பெற்று இருந்தனர். அதே நேரத்தில் முதல் சுற்றில் நோட்டாவுக்கு23 வாக்குகள் கிடைத்து இருந்தது.