புதுச்சேரி உழவர் கரையை சேர்ந்தவர்கள் ரித்திக், தேவா, ஆதி. இவர்களில் ரித்திக்கும், தேவாவும் ரெயின்போ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர். ஆதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ஆதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆதியும் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆதியிடம் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி சத்யா(35) என்பவர் தான் தங்களை வெட்டியதாக கூறினாராம். முன் விரோதம் காரணமாக ரவுடி சத்யா 3 பேரையும் தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. அதன் பேரில் போலீசார் சத்யாவை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.