திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கீழ பஞ்சப்பூரை சேர்ந்தவர் எல். சந்தோஷ்குமார் (25). மேல பஞ்சபூரை சேர்ந்தவர் தங்கமுத்து (26). இருவரும் நண்பர்கள் . இவர்களது நண்பர் ஒருவரின் தங்கையின் காதல் விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சந்தோஷ்குமாரை தங்கமுத்து கடந்த 12.07. 20 21 ம் தேதி வாளால் வெட்டியுள்ளார். இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது . இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் தங்க முத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி மகாலெட்சுமி தீர்ப்பளித்தார்.