தர்மபுரி முண்டாசுபுறவடை என்ற பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 2 மகன்கள். அந்த சி்றுவர்கள், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர்களை தீர்த்து கட்ட வெங்கடேசும், குழந்தைகளின் தாயும் முடிவு செய்தனர். இதன்படி 2 குழந்தைகளையும் கடத்திச்சென்ற வெங்கடேஷ் 3 வயது சிறுவனை கொலை செய்து விட்டார். இன்னொரு குழந்தை தப்பியது. இதற்கிடையே குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெங்கடேஷ் வதந்தியை பரப்பி விட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் குட்டு அம்பலமானது. அவரை போலீசார் கைது செய்தனர்.
