Skip to content

புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

  • by Authour

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று  வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல ரவுடி தெஸ்தானின் மகன் ரஷி, தீடீர் நகரை சேர்ந்த தேவா, மூலகுளம் பகுதியை சேர்ந்த ஆதி என்பது தெரியவந்தது. இதையடுத்து பெரியக்கடை போலீசார் கொலை நடந்த இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இக்கொலைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலையான மூவரும் பிரபல ரவுடி சத்யாவை அவரது எதிரியான ரவுடி முதலியார்பேட்டையை சேர்ந்த விக்கியுடன் கொலை செய்ய திட்டமிட்டதால் இந்த கொலைகள் நடைபெற்றது என கண்டறிந்து பிரபல ரவுடி சத்யா, ஒரு சிறார் உட்பட 10 பேரை இவ்வழக்கில் கைது செய்து 9 பேரை சிறையிலும், சிறாரை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் சிலர் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ரவுடி சத்யாவின் காதலி டாட்டூ நிபுணர் சுமி @ சுமித்ரா (25), கொலைக்கு உடைந்தயாக இருந்த ஆபிரகாம் (24) மற்றும் ஹரிஷ்  (25) ஆகிய மூன்று பேரை பாண்டி மெரினா கடற்கரையோரம் பதுங்கி இருந்த போது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 3 பேர் கொலையில் 6 பேர் சிக்கினர், 3 rowdy murder case police inquiry

கைதான சுமித்ராவிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடம் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு, ரவுடி சத்யா தனது காதலி சுமித்ராவுடன் காதலர் தினத்தை கொண்டாட  கடற்கரை சாலையில் சுற்றி வந்தனர். அப்போது சத்யாவை நோட்டமிட்டு கொலை செய்ய திட்டமிடுவதாக சத்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதனை சத்யா தனது காதலி சுமித்ராவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் உன்னுடன் 100 வருஷம் வாழனும். எனவே உன்னை கொலை செய்யும் முன் அவர்களை நீ கொன்றுவிடு, பிறகு நாம் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என சுமித்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்யா தனது கூட்டாளிகளை கடற்கரைக்கு வரவழைத்து, அதில் ஒருவருடன் தனது காதலியை அனுப்பி வைத்துவிட்டார். பிறகு சத்யா தன்னை நோட்டமிட்ட ரஷி உட்பட 3 பேரை பிடித்து ரெயின்போ நகருக்கு அழைத்து சென்று கொலை செய்தான். பின்னர் சத்யா தப்பி செல்ல கூகுள் பே மூலம் சுமித்ரா பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!