Skip to content
Home » மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏழு திட்டங்களின் கீழ், 36 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவர்கள் பயன்பெறும் வகையில், விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக 3 மாணவர்களுக்கு காலை உணவுப் பெட்டகத்தை வழங்கினார். இவ்விழாவில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,  செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே. சேகர்பாபு,   பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டசத்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 5 தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் திருநங்கைகளுக்கான மாதாந்திர

 

உதவித்தொகையாக ரூ. 1000 த்திலிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தினை துவங்கி வைக்கும் விதமாக 3 திருநங்கைகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கான ஆணையினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!