திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது நண்பர்கள் பீமநகர் மேல தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகன் பிரபா ஹரிகரன் ( 15) சங்கிலாண்டபுரம் பத்மாதெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் ஹரிஹரன் ( 15) ஆகியோர் சேர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். பிறகு மீண்டும் மாணவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இவர்களை பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக 3 மாணவர்களின் பெற்றோர் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களை தேடி வருகின்றனர்
