கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தேர்வெழுத வந்த 3 மாணவிகள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது 2ம் பி.யூ.சி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரின் கடபா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற இருந்தது. தேர்வெழுத காலை முதல் மாணவிகள் வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவை சேர்ந்த அபின் என்ற இளைஞர், கல்லூரி வளாகத்தில் தேர்வுக்காக காத்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் மீது திடீரென ஆசிட்டை வீசினார். அந்த ஆசிட் அருகில் இருந்த 2 மாணவிகள் மீதும் பட்டது. இதில் துடிதுடித்த 3 மாணவிகளை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஒரு மாணவி கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய அபினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் மாணவி மீது ஆசிட் வீசியதாக இளைஞரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.