புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை
பணியாளர்களின் பதவி உயர்வினை வழங்க மறுத்தும், ஊழியர் சட்ட விரோத நடவடிக்கையினை கடைப்பிடிக்கும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளரை(பொது)
கண்டித்தும், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு அரசால் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மாவட்ட நிர்வாகம் பணிநியமன ஆணை வழங்க நீண்ட கால தாமதம் செய்வதை கண்டித்தும், முக்கிய பணிகளுக்கு புதிய பணியிடத்திற்கான முன்மொழிவு
கள் அரசுக்கு அனுப்பி பணியிடம் பெற்று, பணியாளர்களை நியமிக்காமல் மாற்றுப்பணி
என்ற பெயரில் பல மாதங்கள் பணியாளர்களை பணி புரியவைப்பதை கண்டித்தும் போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.
முதல்கட்டமாக கடந்த 17ம்தேதி சங்க
உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.
2வது கட்டமாக 18ம்தேதி மாவட்ட ஆட்சியரிடம் சங்க நிர்வாகிகள் பெரும்திரளாக சென்று மனு அளித்து வலியுறுத்தினர்.
3வது கட்டமாக இன்று அனைத்து வட்ட தலைநகரங்களிலும் மாவட்ட
நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு
கவன ஈர்ப்பு ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டது.இதில் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகபங்கேற்று கோரிக்கைகள் நிறைவேற்றிட பக்க பலமாக
இருந்தனர் என்றார்.