திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருப்பதால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி மக்கள் புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் ரூ 19. 52 லட்சம் மதிப்பீட்டில் 3புதிய மின்மாற்றிகளை அமைக்க அமைச்சர் அன்பில் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார். அந்த பணிகள் முடிவடைந்ததால், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 3 புதிய மின்மாற்றிகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.