கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தகுமார்(40) ஐடி ஊழியர், ஐதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவரது தாயார் கமலேஸ்வரி(70) சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். இதனால் சுகந்தகுமார் ஒவ்வொரு வாரமும் இங்கு வந்து தாயாரை பார்த்து செல்வார்.
அதன்படி வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் சுகந்தகுமார் தனது 10 வயது மகன் நிஷாந்துடன் காராமணி குப்பம் வந்து தங்கி உள்ளார். மறுநாள் முதல் அவரது வீடு திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் உள்ள துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
எஸ்.பி. ராஜாராம் தலைமையில் போலீசார் வந்து அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சுகந்தகுமார், கமலேஸ்வரி, நிஷாந்த் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒரு அறயைில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு கருகிய நிலையில் கிடந்தனர்.
அவர்கள் சனிக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டு அதன் பிறகு எரிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது. மூவரையும் கொன்று எரித்தது யார் என்று போலீசார் விசாரிக்கிறார்கள். இதில் துப்புதுலக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.