மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் , நீதித்துறை அலுவலர்களாக உள்ள மூவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.பூர்ணிமா, எம்.ஜோதிராமன், அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் ஆகியோரை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஜோதிராமன் சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளராக இருக்கிறார்.
இது தவிர ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகளாக உள்ள விக்டோரியா கவுரி, கலைமதி, பாலகிருஷ்ணன், பாலாஜி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக்கவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.