இந்தியில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என்றும் இப்பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் இந்தியில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துளிபெலா’ என இப்பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது.
ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஷாருக்கான் அசத்தல் நடனத்தில், அனிருத்தின் முத்திரை இசையில், இந்தப்பாடல் அட்டகாசமான எனர்ஜியுடன் துள்ளல் ஆட்டம் போட வைக்கிறது. இதில் ஷாருக்கான் மூன்று மொழிகளிலும் பாடலை உதடு ஒத்திசைத்திருப்பது இன்னும் சிறப்பானது. ஜவானின் இந்த முதல் பாடலுக்காக ஷாருக்கான் முதல் முறையாக மூன்று மொழிகளில் முதல் முறையாக
லிப்-சிங்க் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கான பாடலின் வரிகளை அவர் கற்றுக்கொண்டார், மேலும் படப்பிடிப்பின் போது சென்னை யூனிட் அவருக்கு தமிழில் உதட்டசைக்க ஆதரவளித்து உதவியது. இந்தப் பாடலை மூன்று மொழிகளுக்காக படக்குழு மூன்று முறை படமாக்கினார்கள்.
பிரமாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த பாடலை படமாக்க படக்குழு 5 நாட்கள் உழைத்துள்ளது. முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் அனிருத்தின் துள்ளல் இசையுடன் இணைந்து அனைவரும் ரசிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.