திருச்சி மாவட்டம், முசிறி நகர் பகுதி புது கள்ளர் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து மனைவி அகிலாம்பால் வயது 52. இவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துவிட்டு பின்னர் குளித்தலை சுங்க கேட்டில் இருந்து தனியார் பேருந்தில் ஏறி அய்யர் மலைக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார்.
இவர் அய்யர் மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது தான் கழுத்தில் அணிந்து இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
சம்பவம் குறித்து குளித்தலை காவல் நிலையத்தில் அகிலாம்பாள் புகார் செய்தார்.
புகாரை அடுத்து குளித்தலை போலீசார் குளித்தலை சுங்க கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் அய்யர்மலை சென்று ஆய்வில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் 2 பெண்களிடம் நடத்திய விசாரணையில் 3 சவரன் தங்கச் செயினை பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி காவிரி வயது 37.
அதே பகுதியைச் சேர்ந்த மதன் மனைவி சோலையம்மாள் வயது 30 என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் குளித்தலை குற்றவியல் நடுவர் எண் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.இதனை அடுத்து அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.