அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கோவில் எசனை கிராமத்தில் சி.ராஜேந்திரன் என்பவரது மூன்று ஆடுகளை தெரு நாய்கள் கடித்தால் இறந்த விட்டது. அதேபோல் ஆறுமுகம் என்பவரது ஒரு பசுமாடு மற்றும் இரண்டு சிறுவர்கள் ஒரு பெரியவர் என அனைவரையும் நாய் கடித்து விட்டது. இதற்கு உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து உள்ளனர். தெருக்களில் உள்ள நாய்களை பிடித்து மலை காடுகளில் விடும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.