Skip to content
Home » 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கியதாக கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கியதாக கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே பெருங்கடம்பனூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் நற்பணி கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து சோமசுந்தரம், செல்வம்,குப்புசாமி உள்ளிட்ட மூன்று குடும்பங்கள் இந்த அமைப்பின் செயல்பாடுகள் பிடிக்காததால் விலகியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மூன்று குடும்பங்களையும் சுமார் மூன்று ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் இதனால் ஊரில் நடைபெறும் கல்யாணம் இறப்பு உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் யாரும் இறந்தாலும் கூட இறுதி சடங்குக்கு செல்லக்கூடாது என்றும் மற்றும் ஊரில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெற்றால் குடும்பத்தில் உள்ளவர்களை நற்பணிக் கழகத்தின் சார்பாக கலந்து கொள்ள கூடாது என்றும் 100 நாள் வேலைக்கு செல்லும் போது அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்றும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகவும்.

இதனால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மூன்று குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி

வருவதாகவும் இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதைப்போல் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சோமசுந்தரம் என்பவரது சகோதரர் கஜேந்திரன் என்பவர் இறந்த பொழுது அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது அவர் இடுகாட்டிற்கு வரக்கூடாது என்றும் என மிரட்டுவதாகவும் மேலும் மீறி ஊரில் வேறு நபர்கள் திருமணம் மற்றும் சடங்கு சம்பந்தமான பத்திரிகை வைக்க சென்றால் அதற்கும் தடை வைத்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் எனவே இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்பிராஜியிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!