சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலை செய்து வந்த பட்டியல் இன பெண் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக இன்று அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சினிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசும்போது:. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாடம்புகட்ட வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேசும்போது, விலைவாசி உயர்ந்து விட்டது. எனவே அதி்முக வெற்றி பெறும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், மாணவரணி செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்துக்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் அருகே அதி்முக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,மாவட்ட செயலாளருமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் போடப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி இளவரசன்,முன்னாள் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ ராம ஜெயலிங்கம், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டையிலும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் வி்ஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் வி.ராமசாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வி.சி.ராமையா, முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம், புதுக்கோட்டை நகரச்செயலாளர்கள்பாஸ்கர் ,எஸ்.ஏ.எஸ்.சேட், அன்னவாசல்நகரச்செயலாளர்அப்துல் அலி, கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். திமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.