சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே பணிக்கனூர் என்ற இடத்தில் ஒரு பாலத்திற்கு அடியில் 3 சடலங்கள் கிடப்பதாக ஜலகண்டபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 2 ஆண்கள், ஒரு பெண் சடலங்கள் அங்கு கிடந்தது. ஆண்களுக்கு சுமார் 55 வயது இருக்கலாம். 3 சடலங்களையும் கைப்பற்றிய போலீூசார் உடற் கூராய்வுக்காக அவற்றை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேரும் தற்கொலை செய்தார்களா, கொலை செய்யப்பட்டார்களா, அவர்கள் யார், எப்படி இறந்தார்கள் என போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.