உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. கண்காட்சியை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்.பி.கணேசன் தொடங்கி வைத்தார். செயலாளர் சி. முத்துமாரி முன்னிலை வகித்தார். இதில் சங்க முன்னாள் துணைத் தலைவர் கே. மதியழகன் மூத்த வழக்கறிஞர்கள் என். பத்மநாபன், ஆர் ஸ்ரீதர், ஆர் சசிகுமார், மணி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் இந்த புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வருகிற 25ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பொது அறிவு, தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, சட்டப் புத்தகங்கள், சிறுகதை நாவல் என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் 3 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி…
- by Authour
