கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள் நேற்று மாலை அருகில் கிணற்றில் குளிக்கச் சென்றனர். இரவு வரை வீட்டிற்கு வராததால் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை தேடி அலைந்தனர்.
அப்போது கிணற்றில் குளிக்க சென்ற மாணவர்களை காணவில்லை என்று தெரிந்து கொண்டு கிணற்றில் பார்த்துள்ளனர். கிணற்றில் மாணவர்களின் உடல் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்னர். தீயணைப்பு படையினர் வந்த 3 சடலங்களையும் கிணற்றில் இருந்து மீட்டனர். கரூர் நகர காவல் துறையினர் உதவியுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு சடலங்களை அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தினர்.
கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்களான சிறுவர்கள் மூன்று பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.