Skip to content

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷ. முகமது உசேன் (35). திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக உள்ள இவர் சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன் நின்றபோது அவர்மீது மோதுவதுபோல பைக்கில் மூவர் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் இப்படி வரலாமா எனக் கேட்டதால், ஆத்திரமடைந்து அரிவாளால் முகமது உசேனை வெட்டி விட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த முகமது உசேன் துவாக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப் பட்டார். புகாரின்பேரில் துவாக்குடி போலீஸôர் வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற நபர்களை தேடி வந்தனர்.
இந் நிலையில், துவாக்குடி சொசைட்டி தெரு பகுதியில் ஒருவர் ஆயுதத்துடன் பொதுமக்களை மிரட்டியபடி தகராறில் ஈடுபடு வதாக காவல் ஆய்வாளர் ஈஸ்வரனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. அங்கு சென்று பார்த்த போது, அதே பகுதியைச் சேர்ந்த பா. சாந்தகுமார் (25) தகறாரில் ஈடுபட்டுள்ளார். போலீஸாரை கண்டதும் தப்பியோடி, அப்பகுதியில் உள்ள சறுக்குப் பாறையில் குதித்துள்ளார். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தார். அவரை போலீஸôர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நீதிமன்ற ஊழியர் உசேனை அரிவாளால் வெட்டியது அவரும் அவரது நண்பர்களும் எனத் தெரியவந்தது. இதனையடுத்து துவாக்குடி மலை வடக்கு அக்பர் சாலை பகுதியை சேர்ந்த மணி (32), சொசைட்டி தெருவைச் சேர்ந்த பிரேம் (30) மற்றும் சாந்தகுமார் மூவரையும் போலீஸார் கைது செய்தனர். சாந்தகுமார் சிகிச்சை பெறும் நிலையில் மற்ற  2பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!