Skip to content

திருச்சி அருகே 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள  வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்(50) இவர் வீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக நேற்று குழி தோண்டினார்.  6 அடி  ஆழம் தோண்டிய நிலையில்  சத்தம் வித்தியாசமாக கேட்டதால் மெதுவாக   தோண்டி பார்த்தனர். அப்போது  பூமிக்கு அடியில் 3 சிலைகள் இருப்பது  தெரியவந்தது.

மெதுவாக மண்ணை அகற்றி அந்த சிலைகளை சேதமின்றி  எடுத்தனர்.  அந்த 3 சிலைகளும்  ஐம்பொன் சிலைகள் என தெரியவந்தது.  தகவல் அறிந்ததும்  சமயபுரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன்,  தாசில்தார் பழனிவேல், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர்  ரகுராமன் ஆகியோர் அங்கு வந்து பார்த்தனர்.

அது ஐம்பொன் சிலைகள் என்பதால் அவற்றை  வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி  கருவூலத்தில் ஒப்படைத்தனர். 3 சிலைகளும்  எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அதில் ஒரு சிலை  ராமா் சிலை போல உள்ளது. மற்ற இரண்டும் பெண் தெய்வங்களின் சிலைகள்.

error: Content is protected !!