Skip to content
Home » மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

மோடி குறித்து அவதூறு……ராகுலுக்கு 2 ஆண்டு சிறை… சூரத் கோர்ட் அதிரடி

  • by Authour

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019  மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று கூறியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக இவ்வாறு  தாக்கியதாகவும் பாஜக சார்பில்  குஜராத்  மாநிலம் சூரத்  மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி தொடர்ந்த  இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியது.  அதில் ராகுல் காந்தி குற்றவாளி எனக்கூறி,  இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும்  கோர்ட் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் கோர்ட்டே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ராகல் காந்தி இன்று கோர்ட்டுக்கு வந்திருந்தார்.  தீர்ப்பு அளிவிக்கப்பட்டபோது ராகுல் எந்தவித பரபரப்பும் இன்றி வழக்கம் போலவே காணப்பட்டார்.  இந்த வழக்கை ரத்துசெய்யவேண்டும் என நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *