3 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் நியூசி அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் இன்று மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 79.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 259 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், அவரது சுழல் பந்தில் சிக்கி நியூசி துவம்சம் ஆனது. வாஷிங்டன் 23.1 ஓவர் வீசினார். இதில் 4 மெய்டன். அவர் 59 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இன்னொரு தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து மாலை 3.50 மணிக்கு இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். தொடர்ந்து போட்டிகள் நடக்கிறது.