திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனைய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் 2ம் தேதி பிரதமர் மோடி, இதனை திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். இதையொட்டி இன்று காலை விமான நிலையத்தின் 2 முனைய பணிகளை அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டார். இன்று மதியம் இந்திய விமான நிலைய அத்தாரிட்டி சேர்மன் சஞ்சீவ்குமார், ஆய்வு செய்தார். அவருடன் விமான நிலைய டைரக்டர், மற்றும் கட்டுமான பணி ஒப்பந்ததாரர் ஆகியோர்
உடனிருந்தனர்.
இந்த 2வது முனையம் ரூ.1112 ேகாடியில் கட்டப்பட்டுள்ளது. 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பு கொண்டது. ஒரே நேரத்தில் 3480 பணிகளை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 60 செக்கிங் கவுன்டர்கள் , 44 எமிகிரேசன்(புறப்பாடு) கவுன்டர்கள், வந்திருக்கும் எமிகிரேஷன் கவுன்டர்கள்60, ஆகிய சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டது. அத்துடன் விமான நிலையம் முழுவதும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரம் , ராஜராஜ சோழன் சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் ஆர்ட் டைரக்டர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு வெளிநாட்டு விமான நிலையத்துக்கு ஒப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.