வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 வருட சிறையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அப்பீர் செய்வதற்கு வசதியாக தண்டனை 30 நாள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பின் நகல் பொன்முடிக்கு இன்று மாலை தான் கிடைக்கும் என தெரிகிறது. நகல் கிடைத்ததும் சட்ட நிபுணர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்.