இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர்டில்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளனடில்லியில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். டில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா கூறும்போது, “2-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. . நீண்ட நாட்களுக்கு பிறகு டில்லியில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என்றார்.