2 ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி ஆகியோர் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என டெல்லி கோர்ட்டால் விடுவிக்கப்பட்டனர். சுமார் 10 ஆண்டுகளாக இந்த வழக்கில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஆ. ராசா நீலகிரியிலும், கனிமொழி, தூத்துக்குடியிலும் திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தற்போது மத்திய அரசின் சிபிஐயும், அமலாக்கத்துறையும் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படும் என இன்று டில்லி ஐகோர்ட் அறிவித்தது. எனவே இவர்கள் இருவரின் தேர்தல் பணிகளை முடக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்ளும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. அடுத்த கட்டமாக திமுக மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.