Skip to content
Home » இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

இரட்டை குழந்தைகளை கொன்று…. தாய் தற்கொலை…. பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த பெண்ணக்கோணம்  கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(30) இவரது மனைவி  ஜெயா(27) இவர்களுக்கு  2வயதில்  இரண்டு பெண் குழந்தைகள்(நிகிதா, நிகிஷா என்ற இரட்டையர்) உள்ளனர். விஜய் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார். 

ஜெயா தனது இரண்டு மகள்களுடன் கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.  கடந்த ஒரு வாரத்திற்கு முன்  பெண்ணகோணம் வந்தார்.  அங்குள்ள விஜயின் வீட்டின் முதல் தளத்தில்  ஜெயா தங்கி இருந்தார். மாமியார் குடும்பம் தரைதளத்தில் வசித்து வந்தனர்.  இன்று காலை ஜெயாவும், குழந்தைகளும் வெளியே வரவில்லை. வீட்டில் நடமாட்டத்தையும் காணவில்லை. எனவே மேலே சென்று பார்த்தபோது ஜெயா தனது 2 குழந்தைகளுடன்  வீட்டுக்குள்  இறந்து கிடந்தார்.  குழந்தைகள் இரண்டும் படுக்கையில் இறந்து கிடந்தன. வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்பட்டது. ஜெயா சேலையால் தூக்கில் பிணமாக தொங்கினார்.

குழந்தைகளுக்கு அவர் விஷம் கொடுத்து கொன்று விட்டு , தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும்  மங்களமேடு போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது  தற்கொலை தானா, அல்லது கொலையா என  போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைகளை கொன்றுவிட்டு தான்  தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம்  குன்னம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *