அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.10.2024 செவ்வாய் கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
29ம்தேதி செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…
- by Authour
