Skip to content
Home » 28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடன் மானியம் வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது….

தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடன் மான்யம் வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து முதல் கட்டமாக 17 அன்று 3 கோட்ட அளவில் நடைபெற்றது.

இம் முகாமில் கலந்து கொள்ளாதவர்கள் இரண்டாவது கட்டமாக வரும் 28ம் தேதி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட அளவில் நடைபெறும் கல்வி கடன் மேளாவில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshml.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்வது கடன் பரிசீலனையை எளிமையாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முகாமில் கல்வி கடன் பெற விரும்பும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது . மாணவ, மாணவிகளின் ஆதார் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல், 10ஆம் வகுப்பு/12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், PAN CARD நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 ஆண்டு வருமான மற்றும் சாதி சான்றிதழ் நகல்

கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று(BONAFIDE)/ முதல் பட்டதாரி சான்று நகல், கல்வி கட்டண விபர சான்று, மாணவ/மாணவிகளின் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் வங்கி கணக்கு புத்தகம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிக்கடன் மான்யம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை நகல் (BLUE COLOUR PASS BOOK) மாற்றுத்திறனாளி ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் எனில் அவர்களுடைய அனைத்து நகல்கள் UDID CARD தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் உரிய ஆவணங்களுடன் மாணவ/மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் ொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *