Skip to content
Home » மத்திய அரசை கண்டித்து 27ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசை கண்டித்து 27ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் MLA ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது….  கடந்த 23.07.2024 அன்று ஒன்றிய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழகத்திற்கு எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கபட்டுள்ளதோடு ஒன்றிய அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிகநிதி ஒதுக்கி அரசியல் செய்துள்ளதை கண்டித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நமது தமிழக முதல்வர்  தளபதி   தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 பாராளுமன்ற தொகுதியிலும் நாம் வெற்றி பெற்றோம்.

இதனை பொறுத்து கொள்ள முடியாத ஒன்றிய பாரதிய ஜனதா அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் விதமாக செயல்படுவதை கண்டித்தும் நமது கழகத்தலைவர் தமிழக முதல்வர் தளபதியின் ஆணைக்கிணங்கவும், கழக முதன்மை செயலாளர்   கே.என்.நேருவின் வழிகாட்டுதலின்படியும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 27.07.2024 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகதின் அருகில் மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், க.வைரமணி ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் அனைவரும் அறப்போரட்டம் வெற்றியடைய தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் என இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *