Skip to content
Home » இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

இதுவரை 26 முடிஞ்சிருக்கு….100 திருமணம் இலக்கு… பாகிஸ்தான் முதியவர் பேட்டி

  • by Authour

தனது வாழ்நாளில் 100 பேரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த 60 வயது முதியவர். அதுமட்டும் இல்லை, அந்த நபர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மனைவிகளில் அவரது பேத்தியின் வயதுடைய பெண்களும்உள்ளனர்.

ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் அவர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தைகள் பிறந்தவுடன் மனைவியை விவாகரத்து செய்கிறார். அந்த நபரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜியோத் ஜீத் என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், திருமணம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் முதியவரை ஒருவர் பேட்டி எடுக்கிறார்.

அந்த வீடியோவில் 60 வயது முதியவரும் தனது இளம் வயது மனைவிகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். தற்போது, அவருக்கு மொத்தம் 4 மனைவிகள் உள்ளனர். அவர்களின் வயது 19-20 வயதுக்கு மேல் இல்லை. அவரது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை எட்டுவது அவரது இலக்காம். அவருக்கு ஏற்கனவே மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர், அவர்கள் தங்கள் தாயுடன் வசித்து வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு மனைவிகள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவுகளை வழங்கியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இது தான் எனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பார்வையாளர்கள் வாயடைத்துபோகிறார்கள். இங்கே ஒன்னுக்கே வழியில்லையாம் இவர் எப்புட்றாரா……என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *