CISCE School Games & Sports,ன் சார்பாக 2023 ம் ஆண்டிற்கான தேசிய கராத்தே போட்டி டிவைன் மெர்சி பள்ளி, வெஸ்ட் பெங்கால், ஹவுராவில் நவம்பர் 3,4,5,2023 ஆகிய தேதியில் நடைபெற்றது. போட்டி 14,17,19, வயதுக்குட்பட்ட பல்வேறு எடை பிரிவில் நடைபெற்றது.14. வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கிறிஸ்து பன்னாட்டு பள்ளி மாணவர்கள் பார்த்திவ், விஸ்னுராம் தஷ்வந்த் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 25 கிலோ
எடை பிரிவில் பார்த்திவ் முதலிடத்தை பெற்று தமிழ்நாட்டிற்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.தேசிய போட்டியில் முதலிடம் பிடித்து சர்வதேச போட்டியில் பங்கு பெறுவதற்கும் தேர்வாகியுள்ளார். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வெற்றி பெற வைத்த பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா அவர்களையும், மாணவர்களையும் ,பள்ளி தாளாளர் ஜெரால்ட் பிங்னோராராஜ், இயக்குனர் ரபேக்கா, பள்ளி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர், சாம் சுந்தர், மற்றும் பெற்றோர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.