Skip to content

25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி …. அமைச்சர் மெய்யநாதன்…

தமிழ் நாடு அரசின் ஈராண்டு ஆட்சி சாதனை மலர் வெளியீட்டுவிழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பல்வேறுதுறைகளின் சார்பில் 382 பயனாளிகளுக்குரூ.6.41 கோடிமதிப்பில் நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கூறுகையில்; திமுக ஆட்சி அமைந்தபிறகு ரூ.114 கோடி மதிப்பீட்டில் 7 மாடிகொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரூ. 46கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பூம்புகார் சுற்றுலாமையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் கரையை பலப்படுத்தும் பணிகளும், புயல்பாதுகாப்பு மையம் அமைகப்பட உள்ளது. புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை நகரில் பாதாளசாக்கடை பிரச்சனை தீர்வுகான வேண்டியுள்ளது. ரூ.99 கோடி திட்டமதிப்பீடு தயார்செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாதாளசாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தப்படாததால் தற்போது பிரச்னையாக உள்ளது. அதனை விரைவில் சீரமைத்து பாதாளசாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகானப்படும் என்றார். அதனை தொடர்ந்து கட்டுமானபணிகளுக்கு மணல் தட்டுப்பாடு இருப்பதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சட்டசபையில் தெரிவித்ததால் 25 இடங்களில் புதிதாக மணல்குவாரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த மணல் அவசியம் தேவைப்படுவதால் அதனடிப்படையில் தேவைக்கு ஏற்ப பொதுப்பணித்துறை மூலமாகத்தான் மணல்குவாரிகள் திறக்கபட உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!