Skip to content
Home » நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நாகை, மயிலாடுதுறை, கரூர் எஸ்.பிக்கள் உள்பட 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Senthil

தமிழ்நாடு முழுவதும் இன்று 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

சென்னை ஐகோர்ட்,  வழக்குகள் தொடர்பான  கண்காணிப்பு செல்  உதவி ஐஜி  சக்தி கணேசன் , சென்னை   புலனாய்வு பிரிவு(1)  துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

மதுரை தெற்கு மண்டல  அமலாக்கப்பிரிவு எஸ்.பி. சுஜித் குமார்,  சென்னை  செக்யூரிட்டி பிரிவு துணை கமிஷனராக  எஸ்.எஸ். மகேஸ்வரனுக்கு பதில் நியமிக்கப்படுகிறார்.

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள  போலீஸ் பயிற்சி அகாடமி துணை இயக்குனர்  செல்வநாகரத்தினம், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

மத்திய குற்றப்பி்ரிவு  துணை கமிஷனர் என்.எஸ். நிஷா,  நீலகிரி மாவட்ட  எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

ராமநாதபுரம்  கடலோர காவல்படை  எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத்,  சென்னை மைலாப்பூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

திருப்பத்தூர்  எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி எஸ்.பியாக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை எஞுஸ்.பி. கார்த்தி்கேயன்,  கோவை எஸ்பியாக மாற்றப்பட்டார்.

நெல்லை  கிழக்கு துணை கமிஷனர்  ஆதர்ஷ் பச்சேரா பெரம்பலூர் எஸ்பியாகவும்,  தீவிரவாத எதிர்ப்பு பிரிவு  துணை கமிஷனர்  பாக்ய சினேகா பிரியா  சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராகவும் மாற்றப்பட்டனர்.

சென்னை பூக்கடை பஜார்  துணை கமிஷனர்  ஷ்ரேயா குப்தா, திருப்பத்தூர் எஸ்.பியாக மாற்றப்பட்டார்.

சென்னை தாம்பரம்  பள்ளிக்கரணை  துணை கமிஷனர்  கவுதம் கோயல் , சேலம் எஸ்.பியாகவும்,  சேலம் எஸ்பியாக இருந்த அருண் கபிலன் நாகை எஸ்.பியாகவும்  நியமிக்கப்பட்டனர்.

விருதுநகர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா கரூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.  நீலகிரி எஸ்.பி. சுந்தரவடிவேல் சென்னை பூக்கடை பஜார் துணை கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை டிஜிபி  அலுவலகத்தில்  காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவு  உதவி ஐஜி கண்ணன்,  விருதுநகர் எஸ்.பியாக மாற்றப்பட்டார்.

தாம்பரம்  மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுப்புலட்சுமி,  சென்னை கோயம்பேடு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை  மத்திய குற்றப்பிரிவு  துணை கமிஷனர்  ஸ்டாலின்,  மயிலாடுதுறை எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். கரூர் எஸ்.பி. பிரபாகரன்,  திருவண்ணாமலை எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை துணை கமிஷனர் மகேஸ்வரன்,  தர்மபுரி எஸ்பியாகவும்,  சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் சீனிவாசன்,  தென்காசி எஸ்.பியாகவும் நியமிக்கப்பட்டனர்.

சேலம் தெற்கு துணை கமிஷனர் மதிவாணன்,  வேலூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  பெடரேஷன் விஜிலன்ஸ்   சூப்பிரெண்டாக உள்ள  மெகலினா ஐடன்,  சென்னை தலைமை நிலைய  துணை கமிஷனரானார்.

சைபர்கிரைம்  துணை கமிஷனர் கீதாஞ்சலி, சென்னை மத்திய குற்றப்பிரிவு(2) துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை  துணை கமிஷனர் ரமேஷ்பாபு,  சென்னை ஐகோர்ட் செக்கியூரிட்டி துணை கமிஷனரானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!