தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம், கவர்னர் உரை, முதல்வரின் வெளிநாடு பயணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
