2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டு திமுக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் திமுக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அந்த தொகுதி பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைைமை தாங்கி பேசுகிறார். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திமுக தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.