2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை திமுக இப்போதே தொடங்கிவிட்டது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளது.. வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல், நீக்கல் – உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட இந்த பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் விவரம் வருமாறு:
அரவக்குறிச்சி– மாநில அமைப்பு சாரா ஓட்டுநனர் அணி துணை செயலாளர் பணப்பட்டி கே. தினகரன்,
கரூர்– மாநில செய்தித் தொடர்பு துணை செயலாளர் சித்திக்
கிருஷ்ணராயபுரம்(தனி) முன்னாள் எம்.எல்.ஏ. கே. எஸ். மூர்த்தி(வர்த்தகர் அணி துணைத்தலைவர்)
குளித்தலை— மாநில மருத்துவ அணி துணை செயலாளர் ராஜேஷ்பாபு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி— அரியலூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.ஆர். ராமராஜன்,
முசிறி– விநாயகமூர்த்தி, நாமக்கல் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்
துறையூர்(தனி)— பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க கமல்
ஸ்ரீரங்கம்—ந.சந்திரசேகரன், விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர்
திருச்சி மேற்கு— பழஞ்சூர் கே. செல்வம்(வர்த்தகர் அணி)
லால்குடி—ஆடுதுறை உத்திராபதி, (இலக்கிய அணி)
மணப்பாறை—மருத்துவ அணி துணைச்செயலாளர் டாக்டர் அண்ணாமலை
திருச்சி கிழக்கு—- தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிரவன்
திருவெறும்பூர்—புதுக்கோட்டை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிராஜன்.இதுபோல 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.