தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது வெயில் காலம் நிலவி வருகிறது இதனால் பாம்புகள் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளை குளிர்ந்த சூழ்நிலையை நோக்கி நகர்கின்றன. கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பாம்புகள் பிடிபடுவது தொடர் கதையாகி வருகின்றன. பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 23 பாம்புகள்
குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டுள்ளது. மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கட்டுவிரியன், என பல்வேறு வகையான பாம்புகள் இந்த இரண்டு தினங்களில் மட்டும் பிடிக்கப்பட்டு 23 பாம்புகள் ஆழியார் அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.