இந்திய தேர்தல்ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)வில்சன் ராஜசேகரன், தேர்தல் வட்டாட்சியர் செல்வகணேஷ், திமுக சார்பில் நகர செயலாளர் மேயருமான அன்பழகன்,திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,பகுதி செயலாளர் மோகன்தாஸ் காஜாமலை விஜய்,இளங்கோகவுன்சிலர் கமால் முஸ்தபா, முன்னாள் கவுன்சிலர் தினகரன் மற்றும் அதிமுக சார்பில் பகுதி செயலாளர் பூபதி,நாகநாதர் பாண்டி,ரோஜர் சிபிஐ கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிவா, சிபிஐஎம் சார்பில் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன்,ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் இளங்கோ உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 01.01. 2025 ஜ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகள் இல்லம் 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 29.10. 2024 முதல் 30.11. 2024 வரை நடைபெற்றது அதன் அடிப்படையில் தற்போது 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி திருச்சி மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதியிலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 13 ஆயிரத்து 928 இன்று வெளியிடப்பட்ட வாக்காளர்கள் விகிதம் படி 33 ஆயிரத்து 924 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 23 லட்சத்து 47 ஆயிரத்து 852 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இதில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 29 வாக்காளர்களும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக லால்குடியில் இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 853 ஆகவும் உள்ளது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியலில் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1065 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 2543 வாக்குச்சாவடிகள் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ளது புதிய வாக்காளர்கள் மொத்தம் 52697 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் அதேபோல் 18,773 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றி வரும் 1228 வாக்காளர்கள், 3ம் பாலினத்தவர்கள் 365 பேர், 9 சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 640, பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து10 ஆயிரத்து 847 வாக்காளர்கள் என மொத்த திருச்சி மாவட்டத்தில் 23 லட்சத்து 47 ஆயிரத்து 852 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேற்படி இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் / வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் / திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விபரங்களை இறுதிவாக்காளர் பட்டியலில் சரிபார்துக்கொள்ளுமாறு கட்டுக்கொள்ப்படுகிறார்கள். மேலும் தங்களது https://electoralsearch.eci.gov.in/ https://voters.eci.gov.in/ இணைதள முகவரியிலும் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன் ராஜசேகரன், தேர்தல் வட்டாட்சியர் செல்வகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.