தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 16 மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த +1 மாணவர்கள் 2276 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். இதில் திமுக மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி, திமுக நிர்வாகிகள் அனிபா, செல்வமுத்துக் குமரன், கார்த்தி, அறிவழகன், மணிகண்டன், முபாரக் ஹீசைன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
