கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊரக, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கரூர் மாவட்டம் பாகநத்தம் அருகே உள்ள கிராமத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ்(22) என்பவர் சிறுமியிடம், தனியாக பேச வேண்டுமென அழைத்து சென்று பாலியியல் தொந்தரவு கொடுத்ததாக, சிறுமியின் தாயார் கடந்த 2022 ம் ஆண்டு மே 7ம் தேதி க.பரமத்தி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சாட்சியங்கள் ஆகியவற்றை விசாரித்த, கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சூரிய பிரகாசுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூபாய் மூன்று லட்சம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறினார்.