திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் துரைசாமி(38), இவரது தம்பி சோமசுந்தரம் என்கிற சாமி(27) இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை, கொள்ளை, ஆள்கடத்தல் , கொலை உள்பட 69 வழக்குகளில் தொடர்புடையவர்கள். ரவுடி பட்டியலில் உள்ள இவர்களை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று இவர்கள் இருவரும் உய்யகொண்டான் திருமலையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக உறையூர் போலீசாருக்க தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை . குழுமாயி அம்மன் கோயில் அருகே பதுக்கி வைத்திருப்பதாக தெரிவந்தனர்.
எனவே நகைகளை மீட்க இருவரையும் போலீசார் அங்கு அழைத்து சென்றபோது இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவருக்கும் காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை பிடித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அண்ணன், தம்பி இருவரும் கொடுத்த தகவலின் பேரில் உய்யகொண்டான் திருமலை சண்முக நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அனுராதாவை(43) கைது செய்து செய்தனர். அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 22 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த அரிகரன், வெள்ளைச்சாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் ரவுடிகளுக்கு உறவுக்காரர்கள் என கூறப்படுகிறது.