பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக காரில் குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி கிடைத்த இரகசிய தகவலின் படி பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருமாந்துறை அரசு பள்ளிக்கு அருகில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த TN 54 V 5249 என்ற பதிவெண் கொண்ட Eeco Car -யை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்ட விரோதமாக குட்கா பொருட்களை மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்தது. மேற்படி சட்ட விரோதமாக குட்கா பொருட்களை கடத்தி வந்த 1) கார்த்திகேயன்(21) த/பெ சிங்காரவேலு அரங்கூர் திட்டக்குடி வட்டம் கடலூர் மாவட்டம்.
2) பன்னீர்செல்வம்(39) த/பெ சின்னப்பன் மாரியம்மன் கோவில் தெரு, சேஷன் சாவடி வாழப்பாடி வட்டம் சேலம் மாவட்டம். ஆகிய இரண்டு நபர்களையும் கைது செய்து மங்களமேடு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தும் அவர்களிடமிருந்து ரூபாய். 2,10,000 /- (இரண்டு லட்சத்து பத்தாயிரம்) மதிப்புள்ள ஹான்ஸ் 142 கிலோ, கூல் லீப் 20 கிலோ, விமல் பாக்கு 55 கிலோ என மொத்தம் 21 மூட்டைகளில் 217 கிலோ குட்கா பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய மேற்படி காரையும் பறிமுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் உத்தரவின்படி மேற்படி எதிரிகளை மங்களமேடு காவல்நிலைய காவல்துறையினர் நீதிமன்ற காலுக்கு அனுப்பி வைத்தனர்.