மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளா்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.