சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தை தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு மட்டுமே வழங்கப்பட்டு பேக் தைக்கும் வேலையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்டையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், அரசு குழந்தைகள் நல குழுமத்தினர், போலீசார் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.